கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே குப்பை தொட்டியில் கிடந்த பொம்மை துப்பாக்கி

கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே குப்பை தொட்டியில் கிடந்த பொம்மை துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.
கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே குப்பை தொட்டியில் கிடந்த பொம்மை துப்பாக்கி
Published on

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை மெட்ரோ ரெயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அங்கிருந்த குப்பை தொட்டியில் கை துப்பாக்கி ஒன்று கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோயம்பேடு போலீசார், குப்பை தொட்டியில் கிடந்த கை துப்பாக்கியை கைப்பற்றி, புதுப்பேட்டையில் உள்ள ஆயுத கிடங்கிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது, அது சினிமா படப்பிடிப்புகளுக்கும், தீபாவளிக்கு சிறுவர்கள் பயன்படுத்தும் பொம்மை துப்பாக்கி என தெரியவந்தது. குப்பை தொட்டியில் பொம்மை துப்பாக்கியை வீசிச்சென்றது யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com