உடல்நல குறைவால் அவதியுற்ற பெண் தூக்கிட்டு தற்கொலை

உடல்நல குறைவால் அவதியுற்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடல்நல குறைவால் அவதியுற்ற பெண் தூக்கிட்டு தற்கொலை
Published on

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே இந்திராநகர் காலனி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி மாரியம்மாள்(வயது 50). சம்பவத்தன்று மாரியம்மாள் கடந்த 5 ஆண்டுகளாக தைராய்டு மற்றும் உப்பு நீர் பிரச்சினையால் அவதியுற்று வந்துள்ளார். இதற்காக மருந்து-மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வலி அதிகரிக்கவே வீட்டிற்கு பின்புறம் சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்பு வீட்டில் உள்ளவர்கள் தேடிய போது வீட்டுக்கு அருகே உள்ள ஆஸ்பெட்டாஸ் சீட்டு கொட்டகையில் உள்ள கம்பியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து தூக்கிட்டுள்ளார். இதனை கண்ட உறவினர்கள் மாரியம்மாளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com