கோவில்பட்டியில் எலி மருந்து பேஸ்ட்டால் பல் துலக்கிய வாலிபர் உயிரிழப்பு


கோவில்பட்டியில் எலி மருந்து பேஸ்ட்டால் பல் துலக்கிய வாலிபர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 6 Aug 2025 2:02 PM IST (Updated: 6 Aug 2025 2:04 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி பகுதியில் ஒரு வாலிபர் பல் துலக்கும் பேஸ்ட்டுக்கு பதிலாக எலி மருந்து பேஸ்ட்டை பயன்படுத்தியுள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட வேலாயுதபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த வாஞ்சிநாதன் மகன் முனீஸ்வரன் (வயது 21). கோவில்பட்டியில் உள்ள கடையில் வேலை செய்து வந்த இவர், கடந்த மாதம் 29-ம் தேதி பல் துலக்கும் பேஸ்ட்டுக்கு பதிலாக எலி மருந்து பேஸ்டை பயன்படுத்தியுள்ளார்.

இதனால் வாந்தியெடுத்த அவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story