சாத்தனூர் அணையை சுற்றிக் காட்டுவதாக கூறி பள்ளி மாணவியை அழைத்து சென்ற வாலிபர்.. அடுத்து நடந்த சம்பவம்

சிறுமியிடம் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வருவதற்கு ஏன் காலதாமதம்? என பெற்றோர் விசாரித்தனர்.
சாத்தனூர் அணையை சுற்றிக் காட்டுவதாக கூறி பள்ளி மாணவியை அழைத்து சென்ற வாலிபர்.. அடுத்து நடந்த சம்பவம்
Published on

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள வேப்பூர்செக்கடியை சேர்ந்த ஏழுமலை மகன் கருப்பன் (வயது 28). தொழிலாளி. இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படிக்கும் 17 வயது சிறுமியுடன் அறிமுகமானார். அவர்கள் சமூக வலைதளத்தில் தொடர்ந்து பேசி வந்தனர்.

இந்த பழக்கம் மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி சிறுமி பள்ளிக்கு சென்றார். அப்போது, அங்கு வந்த கருப்பன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையை சுற்றிக் காட்டுவ தாக கூறி மோட்டார் சைக்கிளில் சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

பாலியல் பலாத்காரம்

அங்கு கருப்பன், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங் கிருந்து மோட்டார் சைக்கிளில் அன்றைய தினம் மாலையே பள்ளிக்கு அருகே சிறுமியை அவர் விட்டு சென்றுள்ளார். அங்கிருந்து வீட்டிற்கு சென்ற சிறுமியிடம் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வருவதற்கு ஏன் காலதாமதம்? என பெற்றோர் விசாரித்தனர்.

அப்போது சிறுமி, கருப்பன் பலாத்காரம் செய்ததை கூறியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர். ராசிபு ரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கருப்பனை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com