கோவிலில் வழிபாடு.. விபூதி அடித்த பூசாரி - இளம் பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு


கோவிலில் வழிபாடு.. விபூதி அடித்த பூசாரி - இளம் பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு
x

குலதெய்வ கோவிலில் சாமியாடி தலையில் விபூதி அடித்தபோது இளம் பெண் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை


குடும்ப பிரச்னையை தீர்க்க குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்த இடத்தில் சாமியாடி தலையில் விபூதி அடித்தபோது 26 வயது பெண் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 40 நாட்களுக்கு முன் இளம்பெண் பிரியாவுக்கு குழந்தை பிறந்த நிலையில், குடும்ப சண்டை காரணமாக அவரது கணவர் கவுதம் குழந்தையை தூக்கிச்சென்றுள்ளார்.

இந்நிலையில் குல தெய்வ கோவிலில் சமாதானம் பேசிய நிலையில், கவுதமின் தம்பி கவுசிக் சாமியாடி விபூதி அடித்தபோது பிரியா மயங்கி விழுந்து உயிரிழந்தார். 40 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, தனது தாயை இழந்து தவித்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து மதுரை கோட்டாச்சியர் ஷாலினி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story