மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி

மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி
Published on

உசிலம்பட்டி,

இளம்பெண்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு பட்டறை தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மனைவி ரோஷினி (29). இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வீட்டிலிருந்தவாரே ஆன்லைன் மூலம் பணிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த மின் மோட்டாரை இயக்கிய போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்த ரோஷினியை உறவினர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

வழக்குப்பதிவு

இந்த நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார், அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com