திமுக - தேமுதிக கூட்டணி குறித்து ஆதவ் அர்ஜுனா விமர்சனம்: பிரேமலதா விஜயகாந்த் பதிலடி

பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசுபவர்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
பிரேமலதா
Published on: 

கோவை விமான நிலையத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; தே.மு.தி.க, தி.மு.க கூட்டணியில் இருப்பதால் கூட்டணி தர்மத்தை மதித்து இன்று தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறேன். தாராபுரத்தில் தி.மு.க நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறேன். யாராக இருந்தாலும் பெண்களைப் பற்றி தவறாக பேசுவதை எந்த காலத்திலும் அனுமதிக்க முடியாது. யாருக்கும் அந்த உரிமை இல்லை.

மக்கள் தீர்ப்பு

பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசுபவர்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் பொருத்தவரை எங்கள் கூட்டணி வெற்றிபெறும் என்றுதான் நாங்கள் சொல்வோம். மற்றவர்கள் அவர்கள் கூட்டணி ஜெயிக்கும் என சொல்வார்கள். இது இடைத்தேர்தல். மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு” என்றார்.

சம்பந்தமே இல்லாதவர்கள்

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது குறித்து நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்து இருந்தார். விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது' என்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்த கேள்விக்கு பிரேமலதா கூறியதாவது: முதலில் ஆதவ் அர்ஜுன் விஜயகாந்தை நேரில் பார்த்திருக்கிறாரா? முதலில் அவர் விஜயகாந்தை பார்த்து இருக்கின்றாரா? சினிமாவில் ஸ்கிரீனில் பார்த்து இருப்பார். விஜயகாந்தின் ஆன்மா என்னை சுற்றி இருக்கும், எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தான் அவரது ஆன்மா இருக்கும். விஜயகாந்தின் குடும்பத்திற்கும், விஜயகாந்த் கட்சிக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் ஆன்மா குறித்து பேசுவதற்கு அருகதையே கிடையாது. அவர்கள் விஜயகாந்தை பக்கத்தில் கூட பார்த்தது கிடையாது. தம்பி ஆதவ் அர்ஜுனா இதோடு அவரைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் “ என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com