

மதுரை,
மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
போதைப்பழக்கம் என்பது குற்றங்களின் தாய்மடியாக உள் ளது. இதனை வேரோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 1,638 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு, அவர்களையும் சிறையில் அடைக்க இருக்கிறோம். போதையில்லா தமிழ்நாடு என்பது தான் எங்களின் இலக்கு.
பள்ளிகள் அருகே இருந்த மதுபான கடைகள் அகற்றப்பட்டுள்ளன. பிரதமரை சந்திக்கும்போது மேகதாது அணை குறித்து முதல்-அமைச்சர் விஜய் பேசவில்லை என ஆர்.பி.உதயகுமார் கருத்து கூறி உள்ளார். அவருக்கு அரசியல் தெரிவதுபோல அறிவியலும் தெரிய வேண்டும். அவர்களது ஆட்சியில் கொடுக்க வேண்டிய அழுத்தத்தை கொடுத்திருந்தால் அவர்ளுக்கு மக்கள் வாய்ப்பு அளித்திருப்பார்கள்.
த.வெ.க.வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கியத்து வம் கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்த கேள்விக்கு, கதை, திரைக்கதை, வசனம் என எழுதி அதன் கீழ், அண்ணா அறிவாலயம் ஐ.டி.விங் என போட்டுக் கொள்ளவும். எங்களுடைய தலைமை மக்கள், தலைவர் விஜய் மட்டும் தான். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆற்றல்மிக்க அமைச்சர். அவரை சிறுமைப்படுத்துவதற்காக, வேண்டுமென்றே வதந்தி பரப்பி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.