திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா: திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆக. 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை

விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு அடுத்த மாதம் 8-ந்தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா: திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆக. 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உள்ளூர் விடுமுறை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அடுத்த மாதம் 6-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று ஒரு நாள் நடைபெற இருக்கும் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் இந்த மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார் நிலை கருவூலங்களும், அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு அடுத்த மாதம் 6-ந்தேதியன்று செயல்பட வேண்டும். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு அடுத்த மாதம் 8-ந்தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. எனவே இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com