

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தீர்த்தகாடு பகு தியை சேர்ந்த 112 பேருக்கு வீட்டுமனை பட்டாவை அமைச்சர் வன்னியரசு வழங்கி னார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணன் சீமான் பொது வேட்பாளர் என அவரே சொல்லிக்கொள்கிறார். நான் தான் அடுத்த முதல்-அமைச்சர் என்பது போல பேசுகிறார். யாரும் அவரை முன் மொழியவில்லை, அவர் ஆசைப்படுகிறார். பார்ப்பன கடப்பாரையை கொண்டு திராவிட கோட்டையை இடிப்போம் என சொன்னார்.ஆனால், அந்த கடப்பாரையை தூக்கிப் போட்டுவிட்டு திராவிட கடப்பாரையை எடுத்துக்கொண்டு தமிழ் தேசிய கோட்டையை இடிப்பதற்கு கிளம்பி இருக்கிறார். சீமான் பிழைப்புவாதி, சந்தர்ப்பவாதி. இம்மாதிரியான ஒரு அரசியல் செய்யக்கூடிய வர்கள் யாரும் இருக்க முடியாது.
காங்கிரஸ், தி.மு.க.., விடுதலை சிறுத்தைகள் தமிழ் இன துரோகிகள் எனக்கூறி 2009-க்கு பிறகு கட்சி ஆரம்பித்தார். இப்போது ஒரு எம்.எல்.ஏ. பதவிக்காக கொள் கையை விட்டுவிட்டு போகிறீர்கள் என்றால் இதைவிட பிழைப்புவாதம் என்னவாக இருக்கும்?முழுமையாக திராவிட பிரியாணிக்காக கையேந்தி, நிற்கக்கூடியவர்கள் சீமான் போன்றவர்கள்.
வீழ்ந்து விடாத வீரம், மண்டியிடாத மானம் என சொல்கிறார். மண் டியிட்டு கிடக்கிறார். அவரை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள். இதைத்தான் அம்பாசமுத்திரம் தொகுதியும் சொல்லப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.