தலைமறைவாக இருந்தவர் கைது

வாலிபரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைதுசெய்யப்பட்டார்.
தலைமறைவாக இருந்தவர் கைது
Published on

அரக்கோணத்தை அடுத்த சித்தாம்பாடி பகுதியை சேர்ந்தவர் மணி என்ற பிரசாத் (வயது 26). இவர் கடந்த மாதம் 27-ந் தேதி பக்கத்து வீட்டை சேர்ந்த அம்மு என்பவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சோகனூர் பகுதியை சேர்ந்த அம்முவின் மருமகன் முனுசாமி (28) தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாத் மரக்கட்டையால் முனுசாமியை தாக்கிவிட்டு தலைமறைவானார். பலத்த காயமடைந்த முனுசாமி அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத்தை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று சித்தாம்பாடி பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com