தேவர்குளத்தில் பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவானவர் கைது

தேவர்குளம் பகுதியில் ஒரு பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் தடியம்பட்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
தேவர்குளத்தில் பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவானவர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் தடியம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (வயது 42), கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 5 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு திருநெல்வேலி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கருப்பசாமியை தேவர்குளம் போலீசார் தேடிவந்த நிலையில் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com