நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

வீரவநல்லூர் பகுதியில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது
Published on

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு அடிதடி வழக்கில் ஈடுபட்ட வீரவநல்லூர் கடையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் ராஜா (வயது 23) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாத காலமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனால் சேரன்மாதேவி கோர்ட்டில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கார்த்திக் ராஜாவை வீரவநல்லூர் போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறவேற்றினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com