நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு விசாரணைக்கு ஏற்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு விசாரணைக்கு ஏற்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. தற்போது இந்த மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது குறித்து விரிவான புள்ளிவிவரங்கள் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த ரிட் மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுதான்சு தூலியா அமர்வு அண்மையில் விசாரித்தது.

அப்போது, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் வலியுறுத்தல்களை கருத்தில் கொண்டு ரிட் மனுவை விசாரணைக்கு உகந்தது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனால் மூலம் நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com