லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி
Published on

சூளகிரி:

சூளகிரி தாலுகா சென்னப்பள்ளி அருகே உள்ள தேவர்குட்டப்பள்ளியை சேர்ந்தவர் சின்னப்பா (வயது 84). இவர் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு அருகே பேடப்பள்ளி பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டேங்கர் லாரி சின்னப்பா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சின்னப்பாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சின்னப்பா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com