மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதல்; நிதி நிறுவன அதிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதல்; நிதி நிறுவன அதிபர் பலி
Published on

கரூர் மாவட்டம் மொஞ்சனூர் மேற்கு, தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 40). நிதி நிறுவன அதிபர். இவர் நேற்று மதியம் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் இருந்து முத்தூர் நோக்கி தனது ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். முத்தூர் - காங்கயம் சாலை, மாதவராஜபுரம் அருகில் வந்த போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது திடீரென்று எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த வரதராஜனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரதராஜன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறினார்கள். இது பற்றிய புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com