வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகார்; கீழ்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் கீழ்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகார்; கீழ்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
Published on

சென்னை,

சென்னை கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் உதவி காசாளராக இருந்து ஓய்வு பெற்ற சத்யநாராயணன், 1997-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சத்யநாராயணன் வருமானத்திற்கு அதிகமாக 20 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக தெரிவித்தனர்.

இந்த வழக்கில் அவரது மகனுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சத்யநாராயணன் மற்றும் அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் சத்யநாராயணனின் மகன் லட்சுமணன் பெயரில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com