மருத்துவ செலவு தொகை திரும்ப கிடைக்க நடவடிக்கை

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மருத்துவ செலவு தொகை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் விசாகன் கூறினார்.
மருத்துவ செலவு தொகை திரும்ப கிடைக்க நடவடிக்கை
Published on

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத், கருவூலத்துறை இணை இயக்குனர் கமலநாதன் மாவட்ட கருவூல அலுவலர் செல்லையாராஜசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஓய்வூதியர்கள் பலர் தங்களுடைய குறைகளை தெரிவித்தனர். இதில் கலெக்டர் பேசுகையில், அனைத்து அலுவலர்களும் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஓய்வூதியர்களுக்கு உதவ வேண்டும். ஓய்வூதியர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதியர்களுக்கு காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ செலவு தொகை திரும்ப கிடைக்க உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com