ரேசன் கடைகளில் விரும்பாத பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை - உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை செயலர் எச்சரிக்கை

ரேசன் கடைகளில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என சுதான்சு பாண்டே கூறியுள்ளார்.
ரேசன் கடைகளில் விரும்பாத பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை - உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை செயலர் எச்சரிக்கை
Published on

ராமேஸ்வரம்,

தமிழகத்திற்கு வந்துள்ள மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை செயலர் சுதான்சு பாண்டே, மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் ரேசன் கடைகள் மற்றும் மக்கள் அங்காடிகளை ஆய்வு செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாரதி நகர் அருகே உள்ள மக்கள் அங்காடிக்குச் சென்று, அங்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரேசன் கடைகளில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும், விருப்பமில்லாத பொருட்களை வாங்க மக்களை கட்டாயப்படுத்தினார் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com