பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரத்தில் நடவடிக்கை - அறப்போர் இயக்கம் வரவேற்பு

சி.எம்.டி.ஏ. அனுமதியை ரத்து செய்யக்கோரி முதல்-அமைச்சர் விஜய்க்கு மனு அனுப்பப்பட்டதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரத்தில் நடவடிக்கை - அறப்போர் இயக்கம் வரவேற்பு
Published on

சென்னை,

அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“சென்னை பெரும்பாக்கத்தில் பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப்பகுதியில் சட்டத்தை மீறி பிரிகேட் என்டர்பிரைசஸ் நிறுவனம் அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கட்டுமான திட்ட அனுமதியை சட்டவிரோதமாக கடந்த ஆண்டு வழங்கியது.

இந்த விவகாரத்தில் நடந்த ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு ஈர நில ஆணையம் உள்ளிட்ட துறைகளுக்கு அறப்போர் இயக்கம் புகார் அனுப்பியது. மேலும், சி.எம்.டி.ஏ. அனுமதியை ரத்து செய்யக்கோரி முதல்-அமைச்சர் விஜய்க்கும் மனு அனுப்பப்பட்டது.

தற்போது சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம், சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்துள்ளது. அறப்போர் இயக்கம் இதனை வரவேற்கிறது. அதேவேளையில் சி.எம்.டி.ஏ.வும் உடனடியாக கட்டுமான அனுமதியை ரத்து செய்து முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com