சீமான் குறித்து அவதூறு பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

சீமான் குறித்து அவதூறு பரப்பி வரும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.
சீமான் குறித்து அவதூறு பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

நாம் தமிழர் கட்சியின் ஆரணி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சுமன், கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரனிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த புகார் மனுவில், எங்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அரசியலில் அவருடைய வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் சிலர் செயல்படுகின்றனர்.

நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகியோர் சில நபர்களுடன் கூட்டு சேர்ந்து சதித்திட்டம் தீட்டி அரசியல் உள்நோக்கத்துடன், பிற கட்சிகளின் தூண்டுதலின் பேரில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். எனவே, சீமான் மீது அவதூறு பரப்பி வரும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com