சென்னை விமான நிலையத்தில் கூடுதலாக வாடகை கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை; கார் டிரைவர்களுக்கு எச்சரிக்கை

தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம். புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை விமான நிலையத்தில் கூடுதலாக வாடகை கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை; கார் டிரைவர்களுக்கு எச்சரிக்கை
Published on: 

சென்னை

சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வாடகை கார் டிரைவர்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உறுதி செய்யப்பட்ட வாடகை கார் முன்பதிவுகளை டிரைவர்கள் ரத்து செய்துவிட்டு, செயலியில் காட்டப்படும் கட்டணத்தைவிட கூடுதல் தொகை கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பயணிகள் 'கேப் பிக்-அப்' பிளாசா மற்றும் மேற்கு மல்டி லெவல் பார்க்கிங்கில் உள்ள சம்பந்தப்பட்ட கார் நிறுவனங்களின் கவுண்ட்டர்களில் புகார் அளிக்கலாம் என விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்கள் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் சென்னை விமான நிலையத்தின் சமூக வலைதளங்கள் அல்லது 044-22560551, 044-22560512 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம். புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்யும் டிரைவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவதுடன், விமான நிலையத்தில் சேவை செய்வதற்கான அனுமதியும் ரத்து செய்யப்படும் என விமான நிலைய ஆணையம் எச்சரித்துள்ளது.

X