நடிகர் அஜித்துக்கும் முதல்-அமைச்சராகும் யோகம் இருக்கு; ஆனால்... ஜோதிடர் ராதன் பண்டிட் பரபரப்பு பேட்டி

முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டை நியமித்து பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

நடிகர் அஜித்துக்கும் முதல்-அமைச்சராகும் யோகம் இருக்கு; ஆனால்...  ஜோதிடர் ராதன் பண்டிட் பரபரப்பு பேட்டி
Published on

சென்னை

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு பணி அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். இவர் பிரபல ஜோதிடராவார். த.வெ.க. கட்சியில் செய்தி தொடர்பாளராகவும் இருக்கிறார். இதற்கான அரசாணையை தமிழக பொதுத்துறை முதன்மை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் வெளியிட்டிருந்தார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஜோதிடராக இருந்தவருக்கு அரசு பதவியா? அவர் எப்படி அரசியல் ஆலோசனைகளை வழங்குவார் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.

இந்த சூழலில், முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டை நியமித்து பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. அவர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, முதல்-அமைச்சர் விஜய்க்கு ஜோதிடத்தின் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லை என கூறினார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு நான் முதல்-அமைச்சர் விஜய்யையும், அஜித் சாரையும் தொடர்பு கொண்டேன். அஜித் சாருக்கும் முதல்-அமைச்சராகும் யோகம் இருக்கு. ஆனால், அவர் அதில் விருப்பம் இல்லை என்று கூறி விட்டார்.

முதல்-அமைச்சர் விஜய்யின் ஜாதகத்தின்படி அஜித் சார் போட்டிக்கு வரமாட்டார். விஜய் சார் போட்டியே இல்லாத பிரதமர் ஆகும் யோகம் கூட இருக்கு. 100 வருடம் கடந்து அவர் வாழ்வார் என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com