சென்னை கொண்டு வரப்படும் நடிகர் சரத்பாபுவின் உடல்

சென்னை கொண்டு வரப்படும் நடிகர் சரத்பாபுவின் உடல்

இன்று இரவு சாலை மார்க்கமாக நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னை கொண்டு வரப்படுகிறது.
Published on

ஐதராபாத்,

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 71.

ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இன்று மதியம் அவரது பல உறுப்புகள் செயலிழந்ததால் சரத்பாபு உயிரிழந்ததாக மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

தற்போது அவரது உடலானது ஐதராபாத் மாஸ் அசோசியேசன் ஃபிலிம் சாம்பரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இரவு சாலை மார்க்கமாக அவரது உடல் சென்னை கொண்டுவரப்படுகிறது.

நாளை காலை சென்னை தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் திரையுலகத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது அதனை தொடர்ந்து நாளை சென்னையில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com