

திருச்சி,
திருச்சி ஸ்ரீகங்காநகர் இடையே ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:22497/22498) இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணிகள் வசதிக் காக ஸ்ரீகங்காநகரில் இருந்து வருகிற 7-ந்தேதி முதல் வருகிற 28-ந்தேதி வரையும், திருச்சியில் இருந்து வருகிற 11-ந்தேதி முதல் வருகிற அக்டோபர் 2-ந்தேதி வரையும் 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி ஒன்று கூடுதலாக இணைத்து இயக்கப்படுகிறது.
அதுபோல் திருச்சி - ஜோத்பூர் இடையே ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:20481/20482) இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணிகள் வசதிக்காக ஜோத்பூரில் இருந்து வருகிற 2-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையும், திருச்சியில் இருந்து வருகிற 5-ந்தேதி முதல் வருகிற அக்டோபர் மாதம் 3-ந் தேதி வரையும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று கூடுதலாக இணைத்து இயக்கப்படுகிறது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.