ராமேசுவரம் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

ராமேசுவரம்-தாம்பரம் வாராந்திர ரெயிலில் ஒரு 2-அடுக்கு மற்றும் ஒரு 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.
ராமேசுவரம் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
Published on: 

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக மங்களூருவுக்கு வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக இந்த ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. அதாவது, ராமேசுவரம்-மங்களூரு வாராந்திர ரெயிலில் (வ.எண்.16621/16622) வருகிற 3-ந் தேதி முதல் 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து, இந்த ரெயிலில், 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 8 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிக்கான பெட்டி ஆகியன இணைக்கப்பட்டிருக்கும். அதேபோல, ராமேசுவரம்-தாம்பரம் வாராந்திர ரெயிலில் (வ.எண்.16103/16104) வருகிற 1-ந் தேதி முதல் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி மற்றும் ஒரு 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரெயிலில் 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 6 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி கள், 4 பொதுப்பெட்டிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிக்கான பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com