தென்மாவட்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தற்காலிகமாக ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
தென்மாவட்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
Published on: 

மதுரை,

கூட்ட நெரிசலை சமாளிக்க தென்மாவட்ட ரெயில்களில் தற்காலிகமாக ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது. அதன்படி, இந்த கூடுதல் பெட்டி, தாம்பரம்-கொல்லம் ரெயிலில் (வ.எண்.16101) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி வரையிலும், கொல்லம்-தாம்பரம் ரெயிலில் (வ.எண்.16102) வருகிற 17-ந் தேதி முதல் வருகிற 21-ந் தேதி வரையும், சென்னை-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரசில் (வ.எண்.20635) வருகிற 22-ந் தேதி வரையிலும், கொல்லம்-சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரசில் (வ.எண்.20636) வருகிற 23-ந் தேதி வரையிலும் இணைக்கப்படுகிறது.

அதேபோல, தாம்பரம்-ராமேசுவரம் பாம்பன் எக்ஸ்பிரசில் (வ.எண். 16103) வருகிற 19-ந் தேதி வரையிலும், ராமேசுவரம்-தாம்பரம் பாம்பன் எக்ஸ்பிரசில் (வ.எண்.16104) வருகிற 20-ந் தேதி வரையிலும், சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.16751) வருகிற 18-ந் தேதி வரையிலும், ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.16752) வருகிற 19-ந் தேதி முதல் வருகிற 21-ந் தேதி வரையிலும், ராமேசுவரம்-திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரசில் (வ.எண்.16344) வருகிற 17-ந் தேதி முதல் வருகிற 19-ந் தேதி வரையிலும், திருவனந்தபுரம்-ராமேசுவரம் அம்ரிதா எக்ஸ்பிரசில் (வ.எண்.16343) வருகிற 18-ந் தேதி முதல் வருகிற 20-ந் தேதி வரையிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com