

சென்னை,
பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு நாகர்கோவில் - கோவை, ராமேஸ்வரம் - திருப்பதி, ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் செப்டம்பர் 29-ந் தேதி வரை கூடுதலாக ஒரு முன்பதிவு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.
இதேபோல், ராமேஸ்வரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆகஸ்டு 2-ந் தேதி முதல் செப்டம்பர் 29-ந் தேதி வரை கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது.
மேலும், ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் செப்டம்பர் 29-ந் தேதி வரை கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது.
இதேபோல், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை கூடுதலாக ஒரு முன்பதிவு இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.