

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
நெல்லையில் இருந்து தாதர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண். 22630) வருகிற ஏப்ரல் 15-ந்தேதி முதலும், தாதரில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22629), வருகிற ஏப்ரல் 16-ந்தேதி முதலும் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று, 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி 4 கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது.
தாதரில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஏப்ரல் 15-ந்தேதி முதல் தாதருக்கு பதிலாக மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இதேபோல, நெல்லையில் இருந்து தாதர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் மேற்கண்ட ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.