துணை மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

செவிலியர் உள்ளிட்ட படிப்புகளுக்கு அரசு நிறுவனங்களில் கூடுதலாக 3,878 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
துணை மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
செவிலியர்
Published on: 

சென்னை,

தமிழகத்தில் பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு நிறுவனங்களில் கூடுதலாக 3,878 இடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, அவற்றுக்கான மாணவர் சேர்க்கை 3-வது சுற்று கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் செவிலியர் பட்டப்படிப்பு இடங்கள் சேர்க்கப்படுவதுடன், புதிதாக 6 அரசு செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. இதனடைப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பி.பி.டி மற்றும் பி.ஓ.டி உள்ளிட்ட பல்வேறு துணை மருத்துவப் படிப்புகளுக்கான நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நடப்பாண்டில் செவிலியர் உள்ளிட்ட படிப்புகளுக்கு அரசு நிறுவனங்களில் கூடுதலாக 3,878 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

3-வது சுற்று கலந்தாய்வு தொடக்கம்

ஏற்கனவே முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், காலியாக உள்ள இடங்கள் மற்றும் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட கூடுதல் இடங்களை நிரப்புவதற்கான 3-வது சுற்று இணையவழி கலந்தாய்வு தொடங்கியுள்ளது. முந்தைய சுற்றுகளில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கும், குறைவான கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்று காத்திருக்கும் மாணவர்களுக்கும் இந்த கூடுதல் இடங்கள் ஒரு அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது.

மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறை

இந்த 3-வது சுற்றில் பங்கேற்கத் தகுதியுள்ள தரவரிசைப் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்கள், புதிய கூடுதல் இடங்களுக்கும் மற்றும் ஏற்கனவே காலியாக உள்ள இடங்களுக்கும் தங்களின் விருப்பக் கல்லூரிகளைத் தேர்வு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்

கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் தகுதியான மாணவர்கள், மருத்துவத் தேர்வு நிலைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnmedicalselection.net என்ற இணையதள முகவரியில் தங்களது லாகின் விபரங்களைப் பயன்படுத்தி சாய்ஸ் பில்லிங் செயல்முறையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com