பிலாஸ்பூர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்

சேலம், ஈரோடு, திருப்பூர், கேரள மாநிலம் வழியாக இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
பிலாஸ்பூர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
Published on

திருப்பூர்,

பிலாஸ்பூர்-நெல்லை இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் சேலம், ஈரோடு, திருப்பூர், கேரள மாநிலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலுக்கு கேரளா மாநிலம் எர்ணாகுளம்-ஆலப்புழா ரெயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள சேர்த்தலா ரெயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் நிறுத்தப்பட உள்ளது.

பிலாஸ்பூர்-நெல்லை (வண்டி எண்.22619) வாராந்திர எக்ஸ்பிரஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) பிலாஸ்பூரில் இருந்து புறப்பட்டு சேர்த்தலாவுக்கு நாளை (புதன்கிழமை) இரவு 8.24 மணிக்கு வந்து 8.25 மணிக்கு புறப்படும். நெல்லை-பிலாஸ்பூர் (22620) வாராந்திர எக்ஸ்பிரஸ் வருகிற 22-ந்தேதி நெல்லையில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் சேர்த்தலாவிற்கு காலை 7.14 மணிக்கு வந்து 7.15 மணிக்கு புறப்படும். மேற்கண்ட தகவலை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com