குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;

மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். விவசாய பிரதிநிதிகளிடமும் ஆலோசனை செய்யவேண்டும். இதுதான் கடந்த கடந்த காலங்களில் நடந்துள்ளது. கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருந்தும், தமிழகத்துக்கு திறந்துவிட அம்மாநில அரசு மறுக்கிறது. காவிரி ஒழுங்காற்று வாரியத்தின் பரிந்துரையையும், காவிரி மேலாண்மை ஆணையத்தில் உத்தரவுகளையும் கர்நாடக அரசு மதிப்பதில்லை.

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் வரும் என 2 லட்சம் ஏக்கரில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் திறக்காததால் 2 லட்சம் ஏக்கரில் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் காய்ந்து போயுள்ளன. எனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com