டேபிள் டென்னிஸில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் ஜே.டி. மதனுக்கு ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் கிளாஸ் 1' பிரிவில், இந்தியாவிற்காக ஜே.டி. மதன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
டேபிள் டென்னிஸில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் ஜே.டி. மதனுக்கு ஆதவ் அர்ஜுனா வாழ்த்து
Published on: 

சென்னை,

டேபிள் டென்னிஸில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் ஜே.டி. மதனுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 'ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் கிளாஸ் 1' (Men's Singles Class 1) பிரிவில், இந்தியாவிற்காக வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஜெஹான் டொரப் மதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகையினை (High Cash Incentive) பெறும் ஜெஹான் டொரப் மதன், தனது உறுதியான லட்சியத்தாலும் அர்ப்பணிப்புமிக்க உழைப்பாலும் எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகள் புரிய எனது பாராட்டுகள்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com