அ.தி.மு.க. பூத் கமிட்டி விண்ணப்பம் வினியோகம்

அ.தி.மு.க. பூத் கமிட்டி விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டன.
அ.தி.மு.க. பூத் கமிட்டி விண்ணப்பம் வினியோகம்
Published on

அரியலூரில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் பூத் கமிட்டி விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் ராமஜெயலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அன்பழகன், அரியலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் விண்ணப்ப படிவங்களை வழங்கி பேசியதாவது:- கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் தமிழகத்தில் அதிகளவு வாக்குகளை பெற்றோம். அதேபோல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களிலும் நாம் வெற்றி பெற சிறந்த முறையில் பூத் கமிட்டி அமைத்து சிறப்பாக பணியாற்றி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வர அனைவரும் பாடுபட வேண்டும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரியலூர் வழியாக தஞ்சை மாவட்டத்திற்கு 4-ந்தேதி செல்ல உள்ளார். அப்போது நமது கட்சி தொண்டர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று கூறினார். முடிவில் நகர செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com