சந்திரபாபு நாயுடுவுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
Published on

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

இந்த சூழலில் ஆந்திர சட்டசபை தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 175-ல் 136 இடங்களில் தெலுங்குதேசம் கட்சி முன்னிலையில் உள்ளதால் அக்கட்சி வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமோக வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்,

'சட்டசபை தேர்தலில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) வலுவான வெற்றி பெற்றதற்கு தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு வாழ்த்துகள். உங்கள் தலைமையில் அமைய உள்ள அரசாங்கம் மாநிலத்திற்கு முன்னேற்றத்தையும் செழிப்பையும் கொண்டு வந்து மக்களின் கனவுகளை நிறைவேற்றட்டும்,' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com