அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை? - முழு விவரம்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது.
அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை? - முழு விவரம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

அதேவேளை, தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இதுவரை பா.ஜ.க.வுக்கு 27, பா.ம.க.வுக்கு 18, அ.ம.மு.க.வுக்கு 11, த.மா.கா.வுக்கு 5, இந்திய ஜனநாயக கட்சிக்கு 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க. எஞ்சிய 169 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

பாஜக (27 தொகுதிகள்)

* மயிலாப்பூர்

* தளி

* முடக்குறிச்சி

* உதகமண்டலம்

* அவிநாசி

* திருப்பூர் தெற்கு

* கோவை வடக்கு

* கந்தர்வக்கோட்டை

* புதுக்கோட்டை

* திருப்பத்தூர்

* மதுரை தெற்கு

* சாத்தூர்

* திருச்செந்தூர்

* வாசுதேவநல்லூர்

* ராதாபுரம்

* நாகர்கோவில்

* விளவங்கோடு

* ஆவடி

* திருவண்ணாமலை

* தஞ்சாவூர்

* திருவாரூர்

* அறந்தாங்கி

* மானாமதுரை

* ராமநாதபுரம்

* குளச்சல்

* பத்மநாபபுரம்

* ராசிபுரம் (தனி)

பாமக (18 தொகுதிகள்)

* சேலம் மேற்கு

* தர்மபுரி

* பென்னாகரம்

* விக்கிரவாண்டி

* சோளிங்கர்

* மயிலாடுதுறை

* திருப்போரூர்

* உத்திரமேரூர்

* ஜெயங்கொண்டம்

* போளூர்

* செஞ்சி

* விருதாச்சலம்

* ரிஷிவந்தியம்

* காட்டுமன்னார்கோவில்

* கீழ்வேளூர்

* பெரம்பலூர்

* சேலம் வடக்கு

* அம்பத்தூர்

அமமுக (11 தொகுதிகள்)

* பெரியகுளம்

* மன்னார்குடி

* திருவையாறு

* காரைக்குடி

* திருப்பத்தூர்

* நாங்குநேரி

* ஒட்டப்பிடாரம்

* திருச்சி மேற்கு

* சைதாப்பேட்டை

* பூந்தமல்லி

* மடத்துக்குளம்

தமாகா (5 தொகுதிகள்)

* ஒட்டன்சத்திரம்

* ஈரோடு மேற்கு

* ராணிப்பேட்டை

* கிள்ளியூர்

* கும்பகோணம்

இந்திய ஜனநாயக கட்சி (2 தொகுதிகள்)

* பல்லாவரம்

* குன்னம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (1 தொகுதி)

* ராஜபாளையம்

புரட்சி பாரதம் (1 தொகுதி)

* கேவி குப்பம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com