'36 நாட்களுக்குப் பின்..' மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி


36 நாட்களுக்குப் பின்.. மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
x

கோப்புப்படம் 

மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.

இதனிடையே, மேற்கு தொடர்ச்சி மலை, நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தொடர்ந்து தடை விதித்து வந்தது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

இந்த நிலையில், தற்போது அருவியில் சீராக தண்ணீர் விழுவதால், 36 நாட்களுக்குப் பின் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இன்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் மணிமுத்தாறு அருவியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

1 More update

Next Story