

சென்னை,
அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் பாஜக-க்கு 27 தொகுதிகள், பாமக-க்கு 18 தொகுதிகள், அமமுக-க்கு 11 தொகுதிகள், தமாகா-க்கு 5 தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேட்டியளித்த அக்கட்சி தலைவர் ஜான் பாண்டியன், “தமமுகவுக்கு ராஜபாளையம் பொதுத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுத் தொகுதியை தந்ததே பட்டியல் வெளியேற்ற கோரிக்கை வென்றதற்கு அறிகுறி.
பட்டியல் வெளியேற்றத்தின் அறிகுறியாக, முதல் வெற்றியாக பொதுச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. விருப்பத் தொகுதி பட்டியலில் பல தொகுதிகளை கேட்டோம். இப்போது மன நிறைவோடு செல்கிறோம். எந்த சின்னம் என்பது பின்னர் அறிவிக்கப்படும் ,” என்று தெரிவித்தார்.