அதிமுகவும் திமுகவும் ஒன்றாகிவிட்டன: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்

விசிகவால் தவெகவிற்கு எந்த ஆபத்தும் வராது என்று திருமாவளவன் கூறினார் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
ஆதவ் அர்ஜுனா
Published on

செங்கல்பட்டு,

தவெகவில் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளார். அதிமுக எனும் கப்பல் மூழ்கவில்லை. அதனை விஜய் மூழ்க விட மாட்டார். தமிழக அரசியலில் தீண்டாமையை ஒழித்தவர் விஜய். ஜாதி,மத அரசியல் ஒழிக்கப்பட்டுள்ளது. அதிமுகவும் திமுகவும் ஒன்றாகிவிட்டன. மாற்று கட்சியில் இருந்து வரும் தொண்டர்களை தவெகவில் இணைத்துக்கொள்வோம். இப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தவெக தயாராக உள்ளது. திருமாவளவனுக்கும் தவெகவிற்கும் சண்டை போல உருவாக்குகிறார்கள். விசிகவால் தவெகவிற்கு எந்த ஆபத்தும் வராது என்று திருமாவளவன் கூறினார்.

எங்களுடைய ஆதரவு முழுமையாக இருக்கும் என்று திருமாவளவன் கூறினார். இந்த ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று அமைச்சரவையை விஜய் உருவாக்கவில்லை. அதிமுக என்னும் கப்பலை விஜய் மூழ்க விட மாட்டார். அமைச்சரவையில் சேர்ப்பது ஆட்சி அதிகாரத்திற்கான பாதுகாப்புக்கு இல்லை. நாளை தேர்தல் வந்தாலும் தனியாக நிற்க விஜய் தயாராக உள்ளார். 30 நாள் ஆட்சியில் 30 வருடம் திமுக செய்யாததை விஜய் செய்துள்ளார்”இவ்வாறு அவர் பேசினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com