

சென்னை,
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் - 2026: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்! தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 27.09.2026, 28.09.2026 மற்றும் 02.10.2026 ஆகிய தேதிகளில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடை தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தாராபுரம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் கே. பானுமதியை ஆதரித்து, 27.9.2026, 28.9.2026, 2.10.2026 ஆகிய தேதிகளில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு சூறாவளி தேர்தல் பிரசார சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தேதி / கிழமை நேரம் பிரசாரம்/இடம்
27.9.2026 மாலை 4 மணி கன்னிவாடி
மாலை 5 மணி மூலனூர்
மாலை 6 மணி கொளத்துப்பாளையம்
இரவு 7 மணி உப்புத்துறைப்பாளையம்
28.9.2026 மாலை 4 மணி குண்டடம்
மாலை 5 மணி மானூர்பாளையம்
மாலை 6 மணி உப்பாறு மூணு ரோடு
இரவு 7 மணி பொன்னாபுரம்
2.10.2026 மாலை 4 மணி தளவாய்பட்டினம்
மாலை 6 மணி தாராபுரம் காவல்
நிலையம் அருகில் மற்றும் ரோடு ஷா
சுற்று பயண திட்டத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், தாராபுரம் தொகுதியை சேர்ந்த தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், சிறப்பான முறையில் செய்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.