

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய தவெக, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, தேர்தலில் தவெக வெற்றிபெற்ற நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் என பலரும் தவெகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், வட சென்னை அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ். இவர் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிருந்தார்.
அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் இன்று தவெகவில் இணைந்தார். தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த ராஜேஷ் தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார்.