ஜெயலலிதா போல் இருப்பதாக அதிமுக பெண் வேட்பாளர் புகைப்படம் இணையத்தில் வைரல்

கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் திவ்யா போட்டியிடுகிறார்.
ஜெயலலிதா போல் இருப்பதாக அதிமுக பெண் வேட்பாளர் புகைப்படம் இணையத்தில் வைரல்
Published on

கரூர்,

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் டாக்டர் திவ்யா போட்டியிடுகிறார். அவர் கட்சி கொடியின் நிறமான கருப்பு, சிவப்பு, வெள்ளை நிற பார்டர் கொண்ட வெள்ளை நிற சேலை அணிந்து, துண்டை தோளில் அணிந்தவாறு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இது வாக்காளர்களை கவர்ந்துள்ளது.

வெள்ளை நிற சேலையில் டாக்டர் திவ்யா இருப்பதை கண்ட அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் டாக்டர் திவ்யாவை பார்ப்பதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா போல் இருப்பதாக ஆச்சரியத்துடன் கூறி வருகின்றனர். மேலும் வெள்ளை நிற சேலை அணிந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர் திவ்யாவின் புகைப்படத்தையும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் இணைத்து வைக்கப்பட்ட படமானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

இந்த படத்தை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். கடந்த 1990-களில் ஜெயலலிதா, கட்சி கொடி நிற பார்டருடன் கூடிய வெள்ளை நிற சேலையில் தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டது குறிப் பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com