த.வெ.க. அமைச்சர்கள் மீது கவர்னரிடம் அ.தி.மு.க. பரபரப்பு புகார்

ராஜினாமா செய்த 6 எம்.எல்.ஏ.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

த.வெ.க. அமைச்சர்கள் மீது கவர்னரிடம் அ.தி.மு.க. பரபரப்பு புகார்
Published on: 

சென்னை

த.வெ.க. அமைச்சர்கள் மீது கவர்னரிடம் அ.தி.மு.க. தரப்பில் பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் கவர்னர் அர்லேகரை அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, புதிய குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

குதிரை பேரம்

இதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, அ.தி.மு.க.வில் இருந்து 15 பேர் வருவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறது. அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசியது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்றார்.

த.வெ.க. அரசு செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால், மின்சாரம் கொள்முதலில் ஊழல் நடக்க வாய்ப்பிருப்பதாக ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை

இதேபோன்று, ராஜினாமா செய்த 6 எம்.எல்.ஏ.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்தவர்கள் மீது கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் முழு நேர கவர்னர் என்ற அடிப்படையில் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com