27, 28-ந்தேதிகளில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம்

28-ந்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைப்படி, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில்,
* 27.6.2025 - வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகிகள்; மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும்
* 28.6.2025 - சனிக் கிழமை காலை 10 மணியளவில், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர்; மண்டலச் செயலாளர்கள்; மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.
இக்கூட்டங்களில், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் குறித்தும், வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிறுத்தி களப்பணி ஆற்றுவது குறித்தும், கருத்துப் பரிமாற்றமும், ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது. ஆகவே, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட நாட்களில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.