அதிமுக விவகாரம் - தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு

அதிமுக விவகாரம் தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு தேர்தல் ஆணையம் விசாரணைக்கான நோட்டீஸ் அனுப்ப உள்ளது.
அதிமுக விவகாரம் - தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு
Published on

சென்னை,

அதிமுக விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் சிறப்பு தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவுகள் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதேநேரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் முடிவின்றி சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்ற பொதுக்குழுவின் முடிவுகளுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கக்கூடாது என்று பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது.

இருவரது மனுக்களையும் பரிசீலித்து வரும் தேர்தல் ஆணையம் விரைவில் இருவருக்கும் விசாரணைக்கான நோட்டீசை அனுப்ப உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com