

சென்னை,
கிருஷ்ணகிரியில் பெங்களூரு புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
வற்றாத ஜீவநதி போல் பல்வேறு கட்சிகளில் இருந்து ஏராளமானோர் த.வெ.க.வில் இணைக்கின்றனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நம்பி சென்றவர்கள் அனாதையாக நிற்கின்றனர். அ.தி.மு.க.வை விட்டு வெளியே செல்பவர்களை தடுக்க பழனிசாமியும், கே.பி.முனுசாமியும் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.
த.வெ.க.விற்கு ஆதரவு அளித்த 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்றின் பின் ஒன்றாக த.வெ.க.விற்கு வருவார்கள். அ.தி.மு.க.வில் இருந்து 60 சதவீதம் பேர் த.வெ.க.விற்கு வந்துவிட்டார்கள். மீதமுள்ளவர்களும், இடைத்தேர்தலுக்கு முன்பு வந்துவிடுவார்கள்.
இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முன்நிறுத்தி ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியுமா?. த.வெ.க. தங்கம், அ.தி.மு.க. தகரம். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இன்னும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட கட்சியினர் பலர், த.வெ.க.வுக்கு வருவார்கள் என நான் நம்புகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.