திருச்சி, நாகப்பட்டினத்தில் நடைபெறவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தின் தேதி மாற்றம்!

திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 22.8.2026 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும்.
அதிமுக ஆர்ப்பாட்டத்தின் தேதி மாற்றம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- த.வெ.க. அரசை கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : 14.8.2026 கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் தலைமையேற்போர் விபரம்; திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 14.8.2026 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாற்றியமைக்கப்பட்டு 22.8.2026 அன்று நடைபெறும்!

மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசு

விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்; காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. அரசை கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 14.8.2026 - வெள்ளிக் கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமையேற்போர் பட்டியலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 14.8.2026 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள பின்வரும் வருவாய் மாவட்டங்களில், கீழ்க்கண்ட நிர்வாகிகள் கூடுதலாக தலைமை ஏற்பார்கள்.

தலைமை ஏற்போர் (கூடுதல்) மாவட்டம்

மயிலாடுதுறை

கே. கோபால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர்

கடலூர்

சிவா. ராஜமாணிக்கம் கழக அமைப்புச் செயலாளர்

தேதி மாற்றம்

திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 14.8.2026 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாற்றியமைக்கப்பட்டு, வருகின்ற 22.8.2026 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும்.

ஆகவே, வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட, கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழக செயலாளர்கள் ஒன்றிணைந்து, இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களை மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com