முருகன் மாநாட்டில் அதிமுக பங்கேற்றது வெட்கக்கேடானது - அமைச்சர் ரகுபதி


முருகன் மாநாட்டில் அதிமுக பங்கேற்றது வெட்கக்கேடானது  - அமைச்சர் ரகுபதி
x
தினத்தந்தி 23 Jun 2025 12:19 PM IST (Updated: 23 Jun 2025 12:20 PM IST)
t-max-icont-min-icon

அதிமுகவிற்கு அண்ணாவின் பெயரை பயன்படுத்தும் தகுதியே இல்லாமல் போய்விட்டது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது. அதிமுக என்ற பெயர் வைத்து கொள்வதற்கே தகுதியற்றவர்கள். திராவிடத்திற்கு எதிராகத்தான் மாநாட்டை நடத்தியுள்ளனர். இந்து சமய அறநிலை துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது. பவன் கல்யாண் போல் இரட்டை வேடம் போடுபவர்கள் நாங்கள் அல்ல. பவன் கல்யாண் ஆந்திராவில் அரசியல் செய்யட்டும் என்றார்.

1 More update

Next Story