சென்னையில் விமான விபத்து மீட்பு ஒத்திகை

பயணிகளை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுபோலவும் ஒத்திகை பார்க்கப்பட்டது.
சென்னையில் விமான விபத்து மீட்பு ஒத்திகை
Published on

சென்னை,

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ந் தேதி 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், விமானம் விழுந்த பகுதியில் இருந்த 29 பேரும் என 270 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். விபத்துக்கான காரணத்தை கண்டறிய, விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியை மீட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்து போல் ஏற்பட்டால், உடனடியாக எடுக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி சென்னை தாம்பரத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.) இன்று நடைபெற்றது. விமானம் போல தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்த மாதிரி உருவம் தீப்பிடித்தவுடன் அதை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி இணைப்பதையும், பயணிகளை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுபோலவும் ஒத்திகை பார்க்கப்பட்டது.

இதுவொரு ஒத்திகை நிகழ்ச்சியாக இருந்தாலும், திடீரென பார்த்தவர்களுக்கு ஏதோ விமானம் தீப்பிடித்து எரிந்துவிட்டதோ? என்று எண்ணத் தோன்றியது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.    

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com