

சென்னை,
இந்தியா முழுவதும் தெலை தெடர்பு சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில் ஏர்டெல் முன்னணியில் உள்ளது. நாடு முழுவதும் பல கேடி மக்கள் ஏர்டெல் நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பெரும்பாலான மக்கள் ஏர்டெல் சிம் கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு திடீரென்று ஏர்டெல் நெட்வெர்க் பாதிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய நெட்வொர்க்கால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்தனர்.
சென்னையின் பல இடங்களில் ஏர்டெல் நெட்வெர்க்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பேன் பேச முடியாமல் தவித்தனர். மேலும் இணைய சேவையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தெழில்நுட்ப கேளாறு காரணமாக நெட்வொர்க் பாதிக்கப்பட்டதா இல்லை வேறு ஏதும் காரணமா என்பது குறித்து ஏர்டெல் சார்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.